மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

விஜயேந்திரர் சர்ச்சை: முரண்படும் அமைச்சர்கள்!

விஜயேந்திரர் சர்ச்சை: முரண்படும் அமைச்சர்கள்!

‘விஜயேந்திரர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டதாகத் தெரியவில்லை’ என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜனவரி 23) நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.

விழாவின்போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை என காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஆளும் அதிமுகவைச் சார்ந்த இரு அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். நேற்று (ஜனவரி 24) கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலர் தயாரிப்பு பணி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகச் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “விஜயேந்திரர் எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்பது தெரியவில்லை. கவனக்குறைவாக எழுந்திருக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், “தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை அவமதிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018