மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சுவிஸ்ஸிலிருந்து என்ன கொண்டு வந்தீர்கள்?

சுவிஸ்ஸிலிருந்து என்ன கொண்டு வந்தீர்கள்?

‘சுவிட்சர்லாந்த்திலிருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்தீர்கள்?’ என்று பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகப் பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48ஆவது உலகப் பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நான்கு நாள்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கடந்த 22ஆம் தேதி சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24) இந்தியா வந்தார்.

நேற்று முன்தினம் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆறு மடங்காக உயர்ந்த்துள்ளது” என்றார். மேலும், “வளர்ந்த நாடுகள் தங்களின் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அனைத்து நாடுகளும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் உலகத்தையே மாற்றி இருக்கிறது. இணையத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தற்போது போட்டி நிலவுகிறது. இணையப் பாதுகாப்பும், அணு ஆயுதப் பாதுகாப்பும் தற்போது முக்கியமானது. டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. உலகில் தொழில்நுட்பமும் இணையமும் அதி சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளன” என்றும் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்” என வெளிநாட்டவரை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி கருத்துகளை முன்வைத்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018