மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

ரப்பர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

ரப்பர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

வாகன டயர் தயாரிப்புக்குத் தேவையான ரப்பர் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென உள்நாட்டு ரப்பர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘மத்திய அரசு ரப்பர் இறக்குமதி செய்ய தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரப்பர் கட்டிகளின் தர நிலைகளை நிர்ணயிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் ரப்பர் கட்டிகள் பெரும்பாலும் தரமற்றவையாக உள்ளன. இதுபோன்ற தரமற்ற ரப்பர் கட்டிகளை உலகில் வேறெந்த நாடும் இறக்குமதி செய்வதில்லை. இந்தியா ஏற்கெனவே 45 சதவிகித ரப்பரை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவில் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகும்போது எதற்காக இறக்குமதி செய்ய வேண்டும்?’ என ரப்பர் வாரியம் கேள்வியெழுப்பியுள்ளது.

ரப்பர் வாரியத்தின் முன்னாள் தலைவரான பி.சி.சிரியக், பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தூய்மையற்ற முறையில் ரப்பர் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரப்பர்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்படுகிறது. உள்நாட்டுத் தொழில் துறைக்குத் தூய்மையான ரப்பர் தேவைப்படுகிறது. இது இறக்குமதியின் மூலம் சாத்தியமில்லை. உலகளவில் ரப்பர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடான பிரேசிலில் ரப்பர் தோட்டங்களில் பாக்டீரியா தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்அமெரிக்காவிலும் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பாக்டீரியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரப்பர் கட்டிகளை இறக்குமதி செய்வது கேடு விளைவிக்கும்” என்றார்.

முன்னதாக கேரள ரப்பர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரப்பர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும், தரமான ரப்பர் இறக்குமதியை வலியுறுத்தியும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018