கருணாநிதியிடம் ஆ.ராசா வாழ்த்து!


2ஜி வழக்கு தொடர்பாகத் தான் எழுதியுள்ள புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கி ஆ.ராசா வாழ்த்துப் பெற்றுள்ளார்.
2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனிடையே, 2ஜி வழக்கில் தனது தரப்பு நியாயங்களை விளக்கி ‘2ஜி சகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற தலைப்பில் ராசா புத்தகம் ஒன்றை எழுதினார். கடந்த ஜனவரி 20ஆம் தேதி ராசா இதை வெளியிட, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
அப்போது, “2ஜி வழக்கு குறித்த முந்தைய மன்மோகன் அரசின் மௌனமே அந்த அரசை வீழ்த்தியது” என்று குறிப்பிட்ட ராசா, “தேச நலன் கருதி பொது நலன் கருதி நான் இந்தப் புத்தகத்தில் ஒரு சதவிகிதத்தைத் தவிர மீதி அனைத்தையும் எழுதிவிட்டேன். தமிழில் புத்தகத்தை விரைவில் ஸ்டாலின் வெளியிடுவார்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தனது புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆ.ராசா கொடுத்து நேற்று (ஜனவரி 24) வாழ்த்து பெற்றுள்ளார்.