இந்தியாவில் தொடரும் வேலைவாய்ப்பின்மை!

வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளில் சுமார் 77 சதவிகிதம் பாதிக்கப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2017 முதல் 2019 வரையில் ஆசிய பசிபிக் நாடுகளில் சுமார் 2.3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் அதில் முக்கியப் பங்காற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் பல (77%) பாதுகாப்பற்றதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நிரந்தரமில்லாத வேலைவாய்ப்புகளால் ஆசிய பசிபிக் நாடுகளில் 90 கோடிக்கும் மேலான தொழிலாளர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகியுள்ளது.