மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

அப்பாடா... சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டாங்க.

நேத்துதான் சொன்னேன், இன்னமும் ஆண்டாளு, பேருந்துன்னுட்டே இருந்தா எப்படின்னு.

நல்ல வேளையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பக்கம் திருப்பிட்டாங்க.

இருந்தாலும் நித்யானந்தா மேல ஒரு கண்ணு இருக்கத்தான் செய்யுது.

நித்தியானந்தா மடத்தில் 8,500 பெண்கள் - செய்தி

பொண்ணு கிடைக்கல... பொண்ணு கிடைக்கலன்னு... ஊர் ஊரா சுத்தினா எப்படி பொண்ணு கிடைக்கும்?

BOYS NOTE THIS POINT...

அப்படின்னு அனுப்பிட்டு,

அடுத்த புரளியா ஒரு mp3 ஆடியோ வந்துச்சு.

வருகிறது மோடியின் அடுத்த அதிரடி

இந்தியாவின் தேசிய கீதம் மாறுகிறது வருகிற குடியரசு தினம் முதல்.

கேட்டு மகிழுங்கள்.

இதையே எத்தனை காலத்துக்கு அனுப்புவீங்கய்யா..

ஆனா, ஒவ்வொரு தடவயும் அதுல அப்டேட்டா எதாச்சும் சேர்த்துக்கறீங்க. அவ்ளோதான்.

அடுத்ததா,

சற்றுமுன் எனக்கு நடந்த உண்மை சம்பவம்....

Helmet அணியவில்லை என்ற காரணத்தால் எங்கள் இருவரையும் பிடித்த traffic police இருவரிடமும் 100 ரூபாய் அபராதம் கட்ட மறுத்து சில மணி நேர வாக்குவாதத்துக்கு பிறகு helmetஐ அவர்களிடம் அடகு வைத்து விட்டு வந்துவிட்டோம்....

நாங்கள் யார் என்பதை உணர்ந்த அந்த இருவரும் மொபைல், ஒரிஜினல் லைசென்ஸ், வண்டி எல்லாவற்றையும் கேட்டு கடைசியில் அந்த இத்துப்போன helmet வாங்கிக் கொண்டார்கள்.

அதிகாரத்துக்கு எதிராக குரலை

உயர்த்திக்கொடு.....

அன்புடன்.....

ஆ.செந்தில்குமார்.....

அந்த செந்தில்குமார் யாரு என்ன ஊர், அட்ரஸ் ஒண்ணும் இல்ல. இப்படி மெசேஜ் வந்தா உடனே ஃபார்வார்டு பண்ணிடணும்.

வெகு சீக்கிரம் வல்லரசாகிடும்ய்யா...

சரி, வாங்க 5, 6 நாளைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தையே பாடுவோம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018