மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

தண்டவாளத்தில் சாகசம் : இளைஞர் கைது!

தண்டவாளத்தில் சாகசம் : இளைஞர் கைது!

காஷ்மீரில் தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அடில் மக்பூல் என்ற இளைஞர், ஓடும் அதிவேக ரயிலின் தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக் கொண்டு சாகசம் செய்தார். பிறகு எழுந்து நின்று சிரித்தபடி போஸ் கொடுக்க, இதனை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இவர்களின் இந்த மோசமான செயல் குறித்து அறிவுரை வழங்கியதோடு மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் தன் தவறை உணர்ந்த அதில் மக்பூப், "நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன். என்மீது வழக்கு தொடராமல் அறிவுரை கூறி அனுப்பிய காவல் துறையினருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் நேற்று ஹைதராபாத்தின் பாரதிநகர் ரயில் நிலையத்தில் சிவா என்ற மாணவன், ஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018