மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

குடியரசு தினம்: ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

குடியரசு தினம்: ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் நாளை (ஜனவரி 26) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கிறார்கள். ரயில் நிலையத்துக்குள் காத்திருக்கும் பயணிகளையும் சோதனையிடும் பணியில் ஒரு குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டறையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018