மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

பட்ஜெட்டில் உயரும் விவசாயக் கடன்!

பட்ஜெட்டில் உயரும் விவசாயக் கடன்!

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் விவசாயக் கடன் அளவு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு 2017-18 நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்காக ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இதில் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் ரூ.6.25 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியில் விவசாயக் கடன் முக்கிய பங்கு வகிப்பதால் குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயக் கடனுக்கு 9 சதவிகித வட்டி விதிக்கப்படுகிறது. எனினும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 2 சதவிகித வட்டி மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, 7 சதவிகித வட்டியில் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018