மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

அக்னி குண்டத்துக்குப் பதில் ஏர் கலப்பை!

அக்னி குண்டத்துக்குப் பதில் ஏர் கலப்பை!

அரியலூர் அருகே புரோகிதர், அக்னி குண்டம் இல்லாமல் ஏர் கலப்பையைச் சாட்சியாக வைத்து திருமணம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குவாகம் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசனுக்கும் கீழ மாளிகை கிராமத்தைச் சேர்ந்த துர்காதேவி என்பவருக்கும் ஜனவரி 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஏர் கலப்பையைச் சாட்சியாக வைத்து நடந்துள்ளது. தமிழர்களின் மரபுப்படி ஏர் கலப்பைக்கு மாலையிட்டு, பூவும் பொட்டும் வைத்து, அதைச் சுற்றிவந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஒரு விவசாயி, மணமக்களுக்கு ஆட்டுக்குட்டியைப் பரிசாக வழங்கினார். பல விவசாயிகள் தென்னங்கன்றுகள் வழங்கினர்.

விவசாயத்தைக் காப்போம் என்ற முறையில் ஏர் கலப்பையைச் சாட்சியாக வைத்து, இவர்கள் திருமணம் செய்துள்ளார்கள் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணமகன் அன்பரசன் கூறுகையில், :இன்றைய காலகட்டத்தில் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏர் கலப்பையை கடவுளாக கருதி திருமணம் செய்தேன். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். எனது உறவினர்களும் சந்ததியினரும் இதுபோன்றுதான் இனி திருமணம் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018