மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் லாலிபாப்!

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் லாலிபாப்!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

காலிஃப்ளவர் - 50 கிராம்

முட்டைகோஸ் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கு

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

வெங்காயம் - 2

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

பிரெட் தூள் - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

லாலிபாப் ஸ்டிக் - 10

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயம், முட்டைகோஸ், காலிஃப்ளவர், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்த கொள்ளவும்.

எண்ணெயைக் காய வைத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போனவுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், உப்பு, காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். அடுத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பச்சை மிளகாயைச் சேர்த்து அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.

நன்றாக ஆறியவுடன் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து அதன் நடுவில் லாலிபாப் ஸ்டிக்கைச் செருகி வைக்கவும். இவ்வாறு மாவை அனைத்திலும் செய்யவும்.

சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் லாலிபாப்பைத் தோய்த்து பிரெட் தூளில் கோட்டிங் கொடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்துவைத்துள்ள லாலிபாப்பைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018