மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

மதுரவீரனைக் கண்டு வியக்கும் மீனாட்சி

மதுரவீரனைக் கண்டு வியக்கும் மீனாட்சி

சண்முகபாண்டியன் மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாகப் பழகுவதும், எளிமையாக இருப்பதும் தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார் நடிகை மீனாட்சி.

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மதுரவீரன்’. எம்.ஜி.ஆர் நடிப்பில் 1956இல் வெளியான மதுரைவீரன் படத்தின் தலைப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இதில் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீனாட்சி இந்தப் படம் குறித்து அளித்துள்ள பேட்டியில், “நடிப்பைப் பற்றி பெரிதாகப் புரிதல் இல்லாத குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்த இயக்குநர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. இயக்குநர் முத்தையா படப்பிடிப்பில் எனக்குப் பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர்தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியைத் தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா என்ற சந்தேகம் எனக்குப் பலமுறை வந்துள்ளது. பன்முகத் திறமைகொண்டவர் அவர். அவரோடு இந்தப் படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் எளிமையானவர், மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதாரணமாகப் பழகுபவர். அவரைக் கண்டு பலமுறை நான் வியந்திருக்கிறேன். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களைச் சரியாகப் பேச எனக்கு உதவியவர் அவர்தான். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் ஒரு மணி நேரம் பேசியதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா. தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்றுத் தந்துள்ளது. கிராமத்துப் பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்குக் கற்றுத் தந்துள்ளனர். கிராமத்துப் பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் மீனாட்சி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018