மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

அனுமதியின்றி பேனர்: மூன்றாண்டுகள் சிறை!

அனுமதியின்றி பேனர்: மூன்றாண்டுகள் சிறை!

சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விழாக்களை முன்னிட்டு சாலைகளில் வைக்கப்படும் பேனர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் பேனர் வைப்பதற்குத் தடை விதித்தது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரை (வார்டு எண் 1 முதல் 200 வரை) அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் அல்லது தனியார் விளம்பர நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி சட்டத்தில் 326 பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டால் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். விளம்பரம் செய்ய கட்டட உரிமையாளர் அனுமதியும், சென்னை மாநகராட்சி அனுமதியும் வாங்காமல் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டட உரிமையாளர் அனுமதி அளித்திருந்தாலும், மாநகராட்சியிடமும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018