மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

பியூட்டி ப்ரியா: கிளீன் அண்டு கிளியர் சருமம்!

பியூட்டி ப்ரியா: கிளீன் அண்டு கிளியர் சருமம்!

முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்...

* கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

* நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கருவளையங்கள் படிப்படியாக நீங்கும்.

* முகத்தில் பூசும் ஃபேஸ் பேக்குகளைக் காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக, தனியாகத் தெரியாது.

* வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். பொடுகால் ஏற்படும் பருக்கள் தவிர்க்கப்படும்.

* வெளியே செல்வதற்கு முன்பு, சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதால் நீண்ட நேரம் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும்கூட பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், உடலில் சேரும் கொழுப்பு, மன இறுக்கம், மலச்சிக்கல் போன்றவற்றாலும்கூட பருக்கள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க, பி காம்ப்ளெக்ஸ் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

* தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீர் ஊற்றி உப்பு, எலுமிச்சைச் சாறு விட்டு, அதில் இரு பாதங்களையும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல் கை விரல் நகங்களையும் சுத்தம் செய்யலாம்.

இளநரையா?

ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் ஐந்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு நன்றாகச் சூடாக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிய அளவுள்ள கற்பூரத்தைப் போட்டு குளிர்ந்த பின் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்தால் இளநரை குறையும்.

பொடுகு பிரச்னையா?

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018