மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு!

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு!

இந்தியாவின் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பானது ஆண்களுக்கு ஈடாக இருப்பின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவிகித வளர்ச்சி காணப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டில் 7.4 சதவிகித வளர்ச்சியையும், 2019ஆம் ஆண்டில் 7.8 சதவிகித வளர்ச்சியையும் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியானது சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா கையாளும் முறையைப் பொறுத்தே அமையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டைன் லகார்டே கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரில் ஜனவரி 24ஆம் தேதி நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கிறிஸ்டைன் லகார்டே பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் தலையீடு இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளிலும் தொழில் துறையிலும் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களின் பங்களிப்பு இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 சதவிகிதம் உயரும் என்பதற்கான ஆய்வறிக்கைகள் எங்களிடம் இருக்கின்றன” என்றார். இந்தியாவில் பெண்களுக்கான பாகுபாடு அதிகமாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018