மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தொட்டால் கையை வெட்டுங்கள்!

தொட்டால் கையை வெட்டுங்கள்!

பாலியல் தொல்லை கொடுக்கும் வக்கிர புத்திக்காரர்களின் கைகளை வெட்டித்தள்ள வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

திரையுலகில் பாலியல் ரீதியாகப் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பலர் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ள நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்துள்ள பேட்டியில், “பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பாலியல் தொல்லைகளைச் சந்திக்கின்றனர். இந்தியாவில் 60 சதவீதம் பெண்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. குடும்பத்தினர் மீது பழிபோடவும் அவர்களைச் சமூகத்தில் குற்றவாளிகளாக நிறுத்தவும் பயந்து பல பெண்கள் இந்தக் கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை. இதில் இருந்து அவர்கள் மீள வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இதுபோன்ற வன்மங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் வளர்ந்ததும் தைரியம் வரும். பாகுபலி-2 படத்தில் என்னைத் தொடுபவர் கையை நான் வெட்டி எறிவதுபோன்று ஒரு காட்சி வரும். நிஜ வாழ்க்கையில் எந்தப் பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கைகளை வெட்ட வேண்டும். வக்கிர புத்திக்காரர்களைச் சும்மா விடக் கூடாது. மிருகத்தை வெட்டி நாமும் மிருகமாக மாறலாமா என்ற எண்ணம் வரலாம். நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டியது முக்கியம்” என்று தன் எண்ணத்தைக் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பெண்களைத் தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் அகங்காரம் இருக்கிறது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே என்னை அத்துமீறித் தொட்டான். அவனைக் கொல்ல வேண்டும் என்று எனக்குக் கோபம் வந்தது. அப்படிச் செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்தச் சம்பவம் நடந்த அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018