மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

போலீசார் தாக்கியதால் இளைஞர் தீக்குளிப்பு!

போலீசார் தாக்கியதால் இளைஞர் தீக்குளிப்பு!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஒட்டி வந்த இளைஞரை போலீசார் தாக்கியதால், அவர் தீக்குளித்துள்ளார். இதையடுத்துப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் வாகன ஓட்டிகளுக்குப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. போக்குவரத்து போலீசாரும் வாகன ஓட்டிகளிடம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் இளைஞர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஒட்டி வந்துள்ளார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர். அவரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு, கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் காரில் இருந்த பெட்ரோலைத் தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார். உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசாரின் இந்தச் செயலை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் வசந்தாமணி, தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் 59% தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.

தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் என்றும், அவரைத் தாக்கிய போலீசார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்றும் தெரியவந்துள்ளது. தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் என்பதும் இவர் தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டிவந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 24 ஜன 2018