மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

முதல்வர் வீடு முற்றுகை: மாணவர்கள் கைது!

முதல்வர் வீடு முற்றுகை: மாணவர்கள் கைது!

பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு கடந்த வாரத்தில் பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதில் பொதுமக்களும், மாணவர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்ட பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி உளவுப்பிரிவு காவல்துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் வீட்டின் அருகே கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டும் இருந்தது.

இன்று காலை பட்டினப் பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் அருகே சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று முதல்வர் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மாணவர்களை கைது செய்தனர்.

முதறக்கட்டமாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது. இருப்பினும் மாணவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதன் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் வீடு மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018