மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

103 வயதான கவிஞர் நிகானோர் பார்ரா மறைவு!

103 வயதான கவிஞர் நிகானோர் பார்ரா  மறைவு!

சிலி நாட்டைச் சேர்ந்த லத்தின் அமெரிக்க கவிஞர் நிகானோர் பார்ரா (Nicanor Parra) நேற்றிரவு (ஜனவரி 23) காலமானார். அவருக்கு வயது 103.

1914ஆம் ஆண்டு சிலி (Chile ) நாட்டில் பிறந்த நிகானோர் பார்ரா, ஸ்பானிய மொழியின் மிக முக்கியமான கவிஞர். பலமுறை நோபல் இலக்கியப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். நூற்றாண்டைக் கடந்தவர். முக்கியமான கவி ஆளுமைகளில் ஒருவரான அவர், தனது 103ஆவது வயதிலும் கவிதைகளை எழுதிப் பிரசுரித்துவந்தார். அவருடைய கவிதைகள் தமிழ், ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

அவரது ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ (Poems & Antipoems ) ஸ்பானிய மொழியின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பாகக் கருதப்படுகிறது. தன்னை ‘எதிர்க் கவிஞன்’ என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். எளிமையான வார்த்தைகளுடன் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் புற உலகப் பொருட்களையும் கொண்டு அபார வீச்சுடன் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். கேலியையும், நகைச்சுவையையும், நையாண்டியையும் ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தையும், மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்துபவை அவரது கவிதைகள்.

இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எழுதிய அவருடைய கவிதை ஒன்றை தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான கார்த்திகை பாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார் .

உங்கள் விருப்பம் போல எழுதுங்கள்

நீங்கள் விரும்பும் எந்தவொரு பாணியிலும்...

நிறைய ரத்தத்தை வீணடித்து விட்டோம்

ஒரேயொரு பாதை மட்டுமே சரியானது

என நம்பியதில்...

கவிதைக்குள் யாவும் அனுமதிக்கப்பட்டதே...

இந்தவொரு நிபந்தனையோடு மட்டும். நிச்சயமாக,

வெற்றுத்தாளை நீங்கள் மேம்படுத்தியே ஆக வேண்டும்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018