மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

செல்ஃபி விபரீதம்: உயிருக்குப் போராடும் இளைஞர்!

செல்ஃபி விபரீதம்: உயிருக்குப் போராடும் இளைஞர்!

ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார்.

இன்றைய நவீன உலகில் மாணவர்கள், இளைஞர்கள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களில் செல்ஃபி எடுத்து அதைச் சமூக வலைதளங்களில் பகிருவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதன்படி மலை உச்சிக்குச் சென்று எடுப்பது, மிருகங்களுக்கு அருகே சென்று எடுப்பது. பைக்கில் சாகசம் செய்து எடுப்பது போன்ற செயல்களால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் தற்போது ஓடும் ரயிலுக்கு அருகில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் பாரதிநகர் ரயில்வே ஸ்டேஷனில் தன் நண்பர்களுடன் இருந்த சிவா என்ற மாணவர், ரயில் வரும்போது அதனுடன் செல்ஃபி வீடியோ எடுக்க வேண்டும் என்று தண்டவாளத்தில் நின்றார். நண்பர்கள் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. ரயில் வேகமாக வருவதைப் பார்த்தபோதிலும், அசராமல் கமென்டரி கொடுத்தவாறே நின்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவா மீது ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018