மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய வீரர்!

அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய வீரர்!

இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஆஸ்திரேலியா ஒப்பன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நாசரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹங்கேரி நாட்டு வீராங்கனை டைம் பேபாஸ் உடன் சிறப்பாக விளையாடி வந்த இந்திய வீரர் ரோஹன் போபண்ணா காலிறுதியில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

இன்று (ஜனவரி 24) நடைபெற்ற காலிறுதி போட்டியில் டைம் பேபாஸ், ரோஹன் ஜோடி சிறப்பாக விளையாடி 6-4, 7-6 என்ற நேர் செட்களில் அபிகெய்ல் ஸ்பியர்ஸ், ஜான் செபாஸ்டியன் ஜோடியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றது. ரோஹன் கடந்த 2013ஆம் ஆண்டு பிரான்ஸ் ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை லீக் சுற்றுடன் வெளியேறிவிடுவார். இந்த முறை அவர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018