மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பேரறிவாளன் வழக்கில் திருப்பம்!

பேரறிவாளன் வழக்கில் திருப்பம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யுமாறு அளித்த மனுவிற்கு பதிலளிக்கும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) உத்தரவிட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஏழுபேரும் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்பிறகு, அது கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்யக்கோரி, தமிழக சட்டப்பேரவையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சில தகவல்கள் விடுபட்டிருப்பதால் தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார் பேரறிவாளன். மேலும், கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் தன்னையும் இதர 6 பேரையும் குற்றவாளி என 1999ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 24) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018