மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஆண்டாள் சர்ச்சை: சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்!

ஆண்டாள் சர்ச்சை: சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்!

ஆண்டாள் சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கச் செயலாளர் சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்கிற உரையிலும் கட்டுரையிலும் ஆண்டாளை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி ஒரு பிரிவினர் அவருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதுவரை சென்றனர். சில இடங்களில் போராட்டங்களும் நடத்தியுள்ளனர். கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டனம் செய்து தமுஎகச அறிக்கை வெளியிட்டது. எழுத்தாளர்கள் பலரின் கூட்டறிக்கையிலும் தமுஎகச படைப்பாளிகள் கையொப்பமிட்டிருந்தனர். தமுஎகச பொதுச் செயலாளர் சு.வெங்கடேசனும் கையொப்பமிட்டிருந்தார்.

இதனால் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வனும், கௌரவத் தலைவர் அருணனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“கடந்த இரு தினங்களாக வெவ்வேறு எண்களிலிருந்து தோழர் சு.வெங்கடேசனுக்குத் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதும் குடும்பத்தினரைக் கேவலமாகப் பேசுவதும் கொலை மிரட்டல் விடுவதும் எனத் தொடர்கிறது. அவரைத் தொடர்புகொண்டு மிரட்டுமாறு அவருடைய தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு ஒரு வாட்ஸ் அப் செய்தியும் பரப்பப்படுகிறது. அந்தத் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டுச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக் காவல் துறையை அணுகியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையை வற்புறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018