மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

`குட் மார்னிங்' பிரச்சனைக்கு புதிய தீர்வு!

`குட் மார்னிங்' பிரச்சனைக்கு புதிய தீர்வு!

இந்தியர்கள் குட் மார்னிங் என்ற மெசேஜை அதிகளவு அனுப்புவதால் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போனின் வேகம் குறைந்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதளம், வாட்ஸ்அப் போன்ற சேவைகள் மூலம் நாம் அனுப்பும் செய்திகளானது, இண்டர்நெட் டிரைவ் எனப்படும் சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியர்கள் குட்மார்னிங் என்ற மெசேஜை மட்டும் தினமும் லட்சக் கணக்கில் அனுப்பி வருவதாகவும், இதனால் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைந்து வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சிலிகான்வாலி பகுதியில் கூகுள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் மொபைலில் தேவையற்ற செய்திகளை அழிக்க `ஃபைலஸ் கோ' என்ற செயலியையும் வடிவமைத்துள்ளது. இதனை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள் கூகுளின் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குட் மார்னிங் செய்திகளைக் கண்டறிந்து அதனை அழிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து இந்த செயலியின் வடிவமைப்பு குழு தலைவரும், கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளருமான ஜோஷ் உட்வர்ட், "குட் மார்னிங் செய்திகளால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளோம். இந்தியாவில் இதுவரை இந்த செயலியை 1 கோடி பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு போனிலும் சராசரியாக 1 ஜிபி அளவிலான தேவையற்ற மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018