வீடியோ : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவிகள்!

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவால் விபத்தில் சிக்கிய மாணவிகள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புதிய பேருந்து நிலையம் அருகே, இன்று காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு கல்லூரி மாணவிகள் அதே வழியாக வந்த லாரிக்கு மிக அருகே சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் டயர் லாரி மீது உரசியதில். மாணவிகள் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளனர்.
லாரியின் சக்கரங்களுக்கு இடையில் மாணவிகள் சிக்கினர்.அப்போது, சுதாரித்த லாரி ஓட்டுனர், உடனே சாதுர்யமாக லாரியை நிறுத்தினார். இதனால் இரண்டு மாணவிகளின் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது. அருகில் நடத்து சென்றவர்கள் மாணவிகளை தூக்கி அங்கிருந்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ பார்ப்பவர் அனைவரையும் உறைய வைக்கிறது.