மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சமையல் எரிவாயு மானியத்தில் கட்டுப்பாடு!

சமையல் எரிவாயு மானியத்தில் கட்டுப்பாடு!

2018-19 பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மானியத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கணக்கீடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்துவிடும். இந்நிலையில் பட்ஜெட் பற்றிய முன்னறிவிப்புகளும், மதிப்பீடுகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சமையல் எரிவாயு, எரிபொருட்கள், உரம் ஆகியவற்றுக்கான மானியம் பெருமளவில் உயர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இவற்றுக்கான மானியம் தோராயமாக 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கும் என்றும் முன்மதிப்பீடுகள் கூறுகின்றன.

2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.2.4 லட்சம் கோடி நிதியைச் சமையல் எரிவாயு மானிய நிதியாக ஒதுக்கியிருந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இக்ரா நிறுவனம் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2018-19ஆம் நிதியாண்டில் எரிபொருள் மானியம் ரூ.88 கோடியிலிருந்து ரூ.93 கோடியாக அதிகரிக்கப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதேபோல மத்திய அரசு உரங்களுக்கான மானியத்தையும் வரும் பட்ஜெட்டில் 70,000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மானியமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018