தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை!


பேருந்து கட்டண உயர்வு காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக திமுக செயல்தலைவரும்எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜனவரி 24) செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “போக்குவரத்துக்கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலையில் கூடமுதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்ட மாணவர்கள் மீது காவல்துறைதடியடிப் பிரயோகம் செய்து வேனில் ஏற்றிக்கொண்டு போன காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ஆகவே, போக்குவரத்துக் கட்டணத்தை ஏற்றியதால் இன்றைக்கு ஒரு அசாதாரணமான சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது” என்று வேதனைத் தெரிவித்தார்.
உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான நிலையைப் பற்றி விவாதிக்க ஒரு சூழலை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.