உடலுறுப்பு தானம்: மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சி!


உடலறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று மையம் மற்றும் தமிழக உடலுறுப்பு மாற்று ஆணையம் இணைந்து நடத்திய பயோமெட்டீரியல் மைய தொடக்க விழா இன்று (ஜனவரி 24) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் உடலறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"உடலுறுப்பு தான மையம் தமிழகத்தில்தான் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து 3ஆவது முறையாகத் தமிழகம் உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொதுமக்களிடத்தில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் பெருகியுள்ளது.