மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்!

தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்!

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று கூறியுள்ளார் லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி.

1991-96 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, கால்நடைத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில், ஏற்கனவே இரண்டு வழக்குகளில் லாலுவுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சாய்பாஷா மாவட்ட கருவூலத்தில் 33.67 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட மூன்றாவது வழக்கில், இன்று (ஜனவரி 24) லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதித்தார் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரசாத். பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜகன்னாத் மிஸ்ராவுக்கும் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி, சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல என்று கூறியுள்ளார். “நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால், சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவு இறுதியானது அல்ல. இந்த தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018