மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தைப்பூசம்: பழநிக்கு 350 சிறப்பு பேருந்துகள்!

தைப்பூசம்: பழநிக்கு 350 சிறப்பு பேருந்துகள்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைபூசத்தன்று அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிவன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (ஜனவரி 25) தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் தைப்பூசத் திருவிழா தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும். தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி காலை நடைபெறும். ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018