மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அல்லாவையும் ராமனையும் விமர்சித்த எம்எல்ஏ!

அல்லாவையும் ராமனையும் விமர்சித்த எம்எல்ஏ!

இன்னும் சில நாட்களில் கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ”உங்களது வாக்கு அல்லாவுக்கா, ராமனுக்கா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று கூறி, புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளார் அம்மாநில பாஜக எம்எல்ஏ சுனில்குமார்.

கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அங்கு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதாதள கட்சிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றன. முன்கூட்டியே மக்களைச் சந்திக்கும் நோக்கில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன.

இந்த வரிசையில், கர்நாடகாவின் கடலோரப்பகுதியான பந்த்வால் தொகுதியில் நேற்று முன்தினம் (ஜனவரி 22) நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்டார் கர்கலா தொகுதி பாஜக எம்எல்ஏ சுனில்குமார். அப்போது கூட்டத்தினரிடையே பேசிய சுனில்குமார், கர்நாடகா அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பந்த்வால் தொகுதி எம்எல்ஏவுமான ராம்நாத் ராயை விமர்சனம் செய்தார்.

“இந்த தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார் ராம்நாத் ராய். இதற்கு அல்லாவின் கருணையும், முஸ்லிம் மக்களின் ஆதரவுமே காரணம் என்று சொல்லி வருகிறார். இந்த தேர்தல் ராஜேஷுக்கும் ராம்நாத்துக்கும் இடையே நடக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதால், ராம்நாத்தை அல்லா என்று வைத்துக் கொள்வோம். இந்த தேர்தலில் உங்களது வாக்கு அல்லாவுக்கா, ராமனுக்கா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார். பந்த்வால் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வேட்பாளர் ராஜேஷ் நாயக்கை முன்னிறுத்தியே, அவர் இவ்வாறு பேசினார்.

சுனில்குமாரின் இந்தப் பேச்சு கடலோர கர்நாடகா மக்களின் உணர்வுகளைத் தூண்டும்விதத்தில் அமைந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுனில்குமார் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார் எம்எல்ஏ ராம்நாத் ராய். ”என்னைப் பொறுத்தவரை, ராமனும் ரஹீமும் ஒன்று தான். அரசியலில், எதற்காக இவர்கள் மதத்தைக் கொண்டுவருகிறார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 24 ஜன 2018