மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியல்!

ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியல்!

ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் ஷேப் ஆப் வாட்டர் படம் 13 பரிந்துரைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, சிறந்த படங்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பரிந்துரைகள் நடுவர்களால் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையினரின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'ஷேப் ஆப் வாட்டர்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, நடிகை, துணை நடிகை போன்ற முக்கிய விருதுகளும் இதில் அடங்கும். இதன் மூலம் பரிந்துரைகள் பட்டியலில் 'ஷேப் ஆப் வாட்டர்' முதலிடம் வகிக்கிறது. 'பென் ஹர்', 'டைட்டானிக்', 'ரிட்டர்ன் ஆப் தி கிங்' ஆகிய மூன்று படங்களும் இதுவரை 11 ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன. ஷேப் ஆப் வாட்டர் அந்தச் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பில் சுமார் 7 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆஸ்கர் விருதில் தகுதியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை இந்த 7 ஆயிரம் பேர்தான் தேர்வு செய்கிறார்கள். இதில் ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கான பிரிவில் 5 திரைப்படங்கள் அல்லது கலைஞர்களை வரிசைப்படுத்திப் பரிந்துரை செய்ய முடியும். இந்தப் பரிந்துரையில் போதுமான வாக்குகளைப் பெறுபவர் விருதுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்டிரிப் 22ஆவது முறையாக பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018