மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அமர்நாத் பக்தர்களை காப்பாற்றிய டிரைவருக்கு விருது!

அமர்நாத் பக்தர்களை காப்பாற்றிய டிரைவருக்கு விருது!

அமர்நாத் யாத்ரீகர்களை தீவிரவாத தாக்குதலில் இருந்து காப்பாற்றிய டிரைவரக்கு உயரிய விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் கோயில் 5,000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் இந்துக்களின் புனிதத் தலமாக கருதப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயர மலையில் இந்தக் குகை அமைந்துள்ளது. அமர்நாத் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அமர்நாத் யாத்திரை 2017 ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வழக்கத்தை விடக் கூடுதலாக 14 ஆயிரம் ராணுவ வீரர்களும், பதட்டமான பகுதிகளில் 2 ஆயிரம் வீரர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2017 ஜூலை மாதம் 10ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரையை முடித்துத் திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும், காயமடைந்தவர்களும் அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் குஜராத் சென்றடைந்தனர்.

59 பயணிகள் சென்ற அந்தப் பேருந்தை ஷேக் சலீம் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். துப்பாக்கிச் சூடு தொடங்கியதும் ஓட்டுநர் சலீம் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் 52 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஓட்டுநர் சலீமை பல அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.

இந்நிலையில், அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான 'உத்தம் ஜீவன் ரக்‌ஷ பதக்கம்' குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பணமும் வழங்கி கவுரவிக்கப்படும்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018