மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பத்மாவத்: குஜராத்தில் வன்முறை!

பத்மாவத்: குஜராத்தில் வன்முறை!

பத்மாவத் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலத்தில் வாகனங்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு முதலான சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் 'பத்மாவத்'. ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பத்மாவத் திரைப்படத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த இப்படம் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பி.வி.ஆர் மல்டிகாம்ப்ளக்ஸில் பத்மாவத் திரையிடப்பட இருப்பதை அறிந்த இந்து அமைப்பினர் அங்கு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டம் வலுத்து வாகனங்கள், கடைகளை அடித்து நொறுக்கி அவர்கள் வன்முறையில் இறங்கியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து வணிக மேலாளர் ராகேஷ் மேத்தா, “நாங்கள் பத்மாவத் படத்தைத் திரையிடுவதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். ஆனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 25 வாகனங்களுக்கு மேல் தீவைத்து எரிக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வன்முறையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைக் காவல் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் வணிக வளாகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, “சில சமூக விரோத சக்திகள் இந்த வன்முறைக்கும் பின்னால் உள்ளன. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018