திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!


பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரியும் நேற்று (ஜனவரி 23) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய திருமாவளவன், “போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.எந்தக் கட்சியையும் சாராத மாணவர்கள்,பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஆட்சியாளர்களைப் பணியவைக்கும்” என்று குறிப்பிட்டார்.