மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு 2016-17 நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் இந்தியா 17 சதவிகித உயர்வுடன் மொத்தம் 25 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளது. நிதி நெருக்கடியால் தனியார் முதலீடுகள் முடங்கிய போதும் இந்தியா அதிகளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2016-17 நிதியாண்டில் 60 பில்லியன் டாலரை ஈர்த்து சாதனை படைத்த இந்தியா 2017ஆம் ஆண்டில் சீனா ஈர்த்த 137 பில்லியன் டாலரில் பாதி அளவைக் கொண்டிருந்தாலும் 8 சதவிகிதம் கூடுதலான முதலீடுகளை இந்தியா ஈர்த்து சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் சர்வதேச சந்தை ஆலோசனை நிறுவனமான பி.டபிள்யூ.சி. தனது 21ஆவது சி.இ.ஒ. ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஒரு ஆண்டுக்கான முதலீட்டு வாய்ப்பில், சர்வதேச அளவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன. ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் ஆறாவது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவுக்கான முதலீட்டு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பி.டபிள்யூ.சி இந்தியா நிறுவனத்தின் தலைவரான ஷியாமல் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 24 ஜன 2018