மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு!

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கில் இன்று (ஜனவரி 24) பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவைக் குற்றவாளி என அறிவித்தது ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.

பீகார் மாநிலத்தில் 1991-96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவரது ஆட்சியின்போதும், அதற்கு முன்னரும் பீகார் மாநிலத்தில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான இரண்டு வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வெளியாகியுள்ளது. இரண்டு வழக்குகளிலும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பில் தண்டனை பெற்ற லாலு, அதன்பின் ஜாமீனில் வெளிவந்தார். கட்சி நடவடிக்கைகளில் பங்குகொண்டார். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் வெளியான தியோஹர் கருவூலத்தில் பண மோசடி செய்த வழக்கில், அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது, அவர் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா சிறையில் தண்டனையைக் கழித்து வருகிறார்.

இந்த நிலையில், மூன்றாவதாகப் போலி கணக்குகள் மூலம் சாய்பாஸா மாவட்ட அரசு கருவூலத்தில் 33.67 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வாசித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரசாத், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் லாலுபிரசாத் யாதவ் மற்றும் ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018