மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சினிமாத் துறையைச் சாடும் ரீமா

சினிமாத் துறையைச் சாடும் ரீமா

நடிகர்கள் தாத்தா ஆன பின்னரும் அவருக்காகக் கதை எழுதுகிறார்கள்; அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப படம் எடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற டெட்ஸ்டாக் ஷோவில் கலந்துகொண்ட ரீமா கல்லிங்கல், சினிமாத் துறையில் நடிகைகளைவிட நடிகர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். தான் ஒரு பெண்ணியவாதி என்பதால் இதை எதிர்த்துத்தான் கேள்வி கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரீமா, "நான் ஒரு பெண்ணியவாதி, பெண் உரிமைப் போராளி. என்னுடைய பெண் உரிமைப் போராட்டம் என்பது என்னுடைய 12 வயதில் பொரித்த மீனில் ஆரம்பித்தது. எனக்கு 12 வயதாக இருக்கும்போது என்னுடைய அம்மா வீட்டில் மீன் பொரித்தார். மூன்று மீன் துண்டுகள்தான் இருந்தன. அதில் ஒன்றை என்னுடைய பாட்டிக்குக் கொடுத்தார். வயதானவர் என்பதால் அவருக்கு ஒரு துண்டு கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள இரண்டில் ஒன்று என்னுடைய அப்பாவுக்கும் ஒன்று என்னுடைய சகோதரருக்கும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டேன். இதை என் வீட்டில் உள்ளவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே போல் சமூக வலைத்தளத்தில் நடிகையின் பேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் பகுதிக்குச் சென்று பார்த்தால் தெரியும். நாங்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் பாடம் நடத்தி இருப்பார்கள். நடிகர்கள் 20 வயதிலிருந்து 70 வயதானாலும் அவர்களுக்குத் தனி மதிப்பு உள்ளது. திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி; மகன், பேரன் எனத் தாத்தா ஆன பின்னரும் அவருக்காகக் கதை எழுதுகிறார்கள். அவருடைய தகுதிக்குப் படம் எடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018