மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

பெரியபாண்டியன் குடும்பத்துக்கு நிதியுதவி!

பெரியபாண்டியன் குடும்பத்துக்கு நிதியுதவி!

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றின் மேற்கூரையைத் துளையிட்டு, தங்கம், வெள்ளி என 3.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டுபேரைப் பிடிக்க மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி கொள்ளையர்களை நெருங்கும்போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த பெரிய பாண்டியன் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அவரது மகன்கள் ரூபன் மற்றும் ராகுல் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஜனவரி 24) சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018