மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

திமுக போராட்டத்துக்கு கொ.ம.தே.க. ஆதரவு!

திமுக போராட்டத்துக்கு கொ.ம.தே.க. ஆதரவு!

தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கு தங்களது கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.

கடந்த 19ஆம் தேதியன்று, தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்தநாள் முதல் இது அமலுக்கு வந்தது. திடீரென்று அறிமுகப்படுத்தப்பட்ட பயணக்கட்டண உயர்வால், தற்போதுவரை மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுகவின் சார்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் பங்கேற்கும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். இதுகுறித்து, அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

”தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சரிவர கவனிக்காமல் பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்க விட்டுவிட்டு, பேருந்து கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. போக்குவரத்து துறையின் நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்தாலே, போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை ஈட்ட முடியும் என்ற நிலை இருக்கும்போது கட்டண உயர்வு அவசியமற்றது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018