மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

வளர்ச்சிப் பாதையில் உள்நாட்டு விமானங்கள்!

வளர்ச்சிப் பாதையில் உள்நாட்டு விமானங்கள்!

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணம் 17.69 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நாற்பது மாதங்களாக இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இரட்டை இலக்கு வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் 1.12 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர். இது இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட 17.69 சதவிகிதம் கூடுதலாகும். நவம்பர் மாதத்தில் 95.52 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை பொது இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2017ஆம் ஆண்டு டிசம்பரில் 44.30 லட்சம் பயணிகள் இவ்விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அடுத்ததாக ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 16.30 லட்சம் பயணிகளும், ஏர் இந்தியா விமானத்தில் 14.72 லட்சம் பயணிகளும் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் 14.27 லட்சம் பயணிகளும், கோ-ஏர் விமானத்தில் 10.80 லட்சம் பயணிகளும், ஏர் ஏசியா விமானத்தில் 4.93 லட்சம் பயணிகளும், விஸ்தாரா விமானத்தில் 4.13 லட்சம் பயணிகளும் டிசம்பரில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 24 ஜன 2018