மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

கோடம்பாக்கத்தில் பிஸியான ஜெயமோகன்

கோடம்பாக்கத்தில் பிஸியான ஜெயமோகன்

ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் வசனகர்த்தாவாகப் பணியாற்றும் ஜெயமோகன், மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர்களைத் தங்களது படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஒரு சில இயக்குநர்களே அணுகுகின்றனர். மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் படங்களுக்கு சுஜாதாவின் பங்களிப்பு அளப்பரியது. அவரது மறைவிற்குப் பின் ஜெயமோகன் அந்த இடத்திற்கு நகர்ந்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கதை, வசனம் எழுதிய ஜெயமோகன் திரைக்கதைப் பணிகளை மணிரத்னத்தோடு இணைந்து மேற்கொண்டார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப்படமாக அமையவில்லை.

இருப்பினும் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் அவர் வசனம் எழுத ஒப்பந்தமாகிவருகிறார். ரஜினி, விஜய் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவர் வசனகர்த்தாவாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல் - ஷங்கர் கூட்டணி உருவாக்கிய இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் சுஜாதா வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருந்தார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 24 ஜன 2018