மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

முதியோர் விதவைகளுக்கான ஓய்வூதியம் உயர்கிறது!

முதியோர் விதவைகளுக்கான ஓய்வூதியம் உயர்கிறது!

முதியோர் மற்றும் விதவைப் பெண்களுக்கான ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2006ஆம் ஆண்டு, முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்மூலம், தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வயதானவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், விதவைப் பெண்களுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட்டில், முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் 1000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் ( 12 ஆண்டுகள்) முதியோர் மற்றும் விதவைப் பெண்களுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தாமல் உள்ளது. தற்போது, உதவித் தொயைகை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018