ஆப்பிள் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டம்!


இமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் விளைச்சலை உயர்த்தி சர்வதேசச் சந்தையில் அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த வேளாண் நிபுணர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தோட்டக்கலைத் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இத்திட்டம் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,134 கோடி செலவிடப்படுகிறது. இதன் மூலம் இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஆப்பிள்களை அதிகளவில் உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முடியும். இமாசலப் பிரதேச மாநிலத்தில் தற்போதைய ஆப்பிள் உற்பத்தி அளவான 8 மெட்ரிக் டன் அளவிலிருந்து 30 மெட்ரிக் டன் அளவாக உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உலகிலேயே அதிகமாக நியூசிலாந்தில் ஒரு ஹெக்டேருக்கு 65 மெட்ரிக் டன் ஆப்பிள்கள் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.