மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

சதமடித்த இமான்

சதமடித்த இமான்

ஸ்டார் ஹோட்டல்களில் கீ போர்டு பிளேயராக தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய டி.இமான் 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தோடு 100 படங்களை நிறைவு செய்துள்ளார்.

கும்கி படத்திற்கு இசையமைத்ததற்காக தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றுள்ளார். “இசையமைப்பாளர்கள் ஆதித்யன், மகேஷ் ஆகியோரிடம் பணியாற்றினேன். ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை ஜெயக்குமாரிடம் பணியாற்றினேன். அவரிடம் முதன்முதலாகப் பெற்ற 500 ரூபாய் சம்பளத்தை இப்போதும் விலை மதிப்பற்றதாகவே கருதுகிறேன்” என இமான் டெக்கான் க்ரோனிக்கிளுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவரது தந்தை டேவிட் உட்பட அனைத்து வழிகாட்டிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இமான் தன்னிடம் பணியாற்றும் கலைஞர்களுக்கு உடனடியாக சம்பளத்தைக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “75 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மேல் இசையமைத்தது வெள்ளித்திரையில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கையளித்தது. சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்திய குட்டி பத்மினிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபலமான பல பாடலாசிரியர்களின் வரிகளுக்கு இசையமத்தாலும் யுகபாரதி - இமான் கூட்டணி நினைவில் நிற்கும்படியான பல பாடல்களைக் கொடுத்துவருகிறது. “எனது மிகப் பெரிய பலம் யுகபாரதி சார்தான். நான் இதுவரை 120 புதிய குரல்களை எனது இசையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்” என்று இமான் கூறியுள்ளார்.

ஸ்ரேயா கோஷலுடன் பணியாற்றுவது குறித்துப் பேசிய இமான், “நான் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பாட அழைக்கும் பாடகி அவர் ஒருவர் தான். நேர நெருக்கடி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கித் தருவார்” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018