மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தேசிய பெண் குழந்தைகள் தினம்!

தேசிய பெண் குழந்தைகள் தினம்!

நாடு முழுவதும் இன்று (ஜனவரி 24)தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டில் பாலின பாகுபாடு ஒரு பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்திய சிறுமிகள் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைத் திருமணங்களால் குழந்தைப் பேறு சிக்கல், பிரசவ கால மரணம் எனப் பெண் குழந்தைகளின் நிலை மோசமாகி வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தனி சட்டம் இருந்தபோதிலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.

எனவே, பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதற்காகவும்,பெண் குழந்தைகளுக்கான சம வாய்ப்பு மற்றும் சம உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், பல துறைகளில் சாதனைப் படைக்கும் அவர்களை ஊக்கப்படுத்தவும், 2009ஆம் ஆண்டு முதல், ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல், 2011ஆம் ஆண்டு முதல், அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 24 ஜன 2018