அமேசான் கோ: அமெரிக்க பயனர்களுக்கு மட்டும்!


அமேசான் கோ என்ற அதிநவீன சூப்பர் மார்கெட் ஒன்றினை அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் நிறுவி உள்ளது.
உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த பின்னர் பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கத் தொடங்கினர். ஆன்லைன் விற்பனையில் பயனர்களைக் கவர்ந்த அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலில் அமெரிக்காவில் புதிய நவீன சூப்பர் மார்கெட் ஒன்றினை நிறுவ உள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதற்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக சோதனை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அமேசான் கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய நவீன சூப்பர் மார்கெட் ஆனது தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. அதன் பயன்பாடு குறித்த தகவல்களையும் அமேசான் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது. பயனர்கள் பொருட்களை வாங்க வரிசையில் நின்று காத்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றம் செய்ய இந்த அமேசான் கோ நிறுவப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டில் பயனர்களை உள்ளே செல்வதற்கு முன்னர் அமேசான் அப்ளிகேஷனின் மூலம் ஸ்கேன் செய்து பயனர்கள் உள்ளே நுழைய வேண்டும். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு கேமராக்களும் பயனர்களைக் கண்காணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் அவர்களது கைகளில் எடுக்கும் பொருட்கள் சென்சார் மூலம் கண்டறியப்பட்டு அவை அமேசான் அப்ளிகேஷனில் கார்டில் இணைக்கப்படும்.