மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

இணைய வசதி: உயரும் கட்டணம்!

இணைய வசதி: உயரும் கட்டணம்!

விமானங்களில் இணையச் சேவையைப் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் விமானக் கட்டணங்களில் 30 சதவிகிதம் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வான்வெளியில் பறக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட சேவைகளை அனுமதிப்பதற்கான உத்தரவை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பு விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இனி அவர்கள் விமானத்தில் பயணிக்கும்போது தங்களது செல்ஃபி புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தாராளமாகப் பதிவேற்றம் செய்ய முடியும். அதேநேரம் இச்சேவையில் விமானப் பயணக் கட்டணங்களும் உயரவும் உள்ளன. 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் இணையச் சேவையைப் பயன்படுத்தும்போது பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் கூடுதல் செலவாகும் என்று விமானத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018