மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

இலவசப் பயண அட்டை தொடரும்!

இலவசப் பயண அட்டை தொடரும்!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுவரும் இலவசப் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டணத்தை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மடங்காகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்குத் தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களாக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

“மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது.

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 100 சதவிகித இலவசப் பயணச் சலுகையின் மூலம் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களுக்குப் பழைய பேருந்து கட்டண அடிப்படையில், 50 சதவிகிதம் மானியம் வழங்கி வருகிறது.

பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் இந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 2,13,810 பயண அட்டைகளும், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 35,921 பயண அட்டைகளும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 28,348 பயண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்தப் பின்பும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் கல்லூரிகளில் படிக்கும் 3.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு 50 சதவிகிதம் கட்டணச் சலுகையுடன் கூடிய பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018