மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

அதிமுக ஆட்சி நாள்கணக்கில்தான் நீடிக்கும்!

அதிமுக ஆட்சி நாள்கணக்கில்தான் நீடிக்கும்!

‘அதிமுக ஆட்சி நாள்கணக்கில் அப்புறப்படுத்தப்படும்’ என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக, தேமுதிக, புரட்சி பாரதம் போன்ற மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்துகொள்ளும் விழா அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது. அப்போது சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், “நாட்டில் இன்று யார் யாரோ, ஏதேதோ திட்டங்களைத் தீட்டி சதிவலைகளைப் பின்னி, திமுகவை ஒழிப்பதற்கு முயற்சிசெய்து கொண்டிருக்கின்றனர். திமுக தமிழ்நாட்டில் இருந்தால் தம்முடைய சதி திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என அவர்கள் நினைக்கின்றனர். அப்படி முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல; அதை நம்பி அதில் சிக்கிக்கொள்பவர்களுக்கும் சேர்த்துச் சொல்கிறேன். திமுகவை எந்தக் கொம்பன் வந்தாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், திமுகவை அழிக்க முயன்றவர்கள்தான் அழிந்துபோயுள்ளனர் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “திமுக தற்போது ஆளுங்கட்சி அல்ல. ஆனால், விரைவில் ஆளுங்கட்சியாக வரப்போகிறது. ஆட்சியின் தலைவனாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாட்டுக்கு உழைப்பது திமுகதான்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

“18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் தீர்ப்புதான் வரப்போகிறது. மாதக்கணக்கல்ல, வாரக்கணக்கல்ல, நாள்கணக்கிலேயே இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்படும்” என்று சூளுரைத்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 24 ஜன 2018